புதுக்கோட்டை மாநகர பகுதியான மேலராஜவீதியில் இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலயமாக ஸ்ரீ காணங்குண்டு பிள்ளையார் ஆலயம் திகழ்கிறது.

இந்த ஆலயத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நூதன முறையில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜை நடைபெற்று இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட்ட பிறகு காசி ராமேஸ்வரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட புனித நீரை கும்ப கலசத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தனர்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




