மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் வருட அபிஷேக விழா நடைபெற்றது.

மூன்று தெய்வங்களுக்கும் பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி சந்தனம் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கருப்பு குருநாதர் ஐயப்ப பக்தர்கள், வைரம் குருநாதர், ரூபன் ஒருங்கிணைப்பு செய்தனர்.
தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்ற அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கச்சை கட்டி குட்லாடம் பட்டி செம்மணி பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் உணவருந்தி சென்றனர்.




