மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள ராஜம்பாடி எனும் இடத்தில் நேற்று கால்கள்களில் அடிபட்ட நிலையில் புள்ளிமான் ஒன்று அங்கிருந்த மரக்கடையில் புகுந்தது. இதனை கண்ட கடை உரிமையாளர் உடனடியாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தன் பேரில் அங்கு விரைந்து வந்த நாகமலை போலீஸ் எஸ் ஐ ஆனந்த், தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் வனத்துறையினர் அந்த மானை பத்திரமாக மீட்டு நாகமலை புதுக்கோட்டை யில் சிகிச்சை அளித்து பின்னர் வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். அங்கிருந்து கால் நடை அவசரகால ஆம்புலன்ஸ் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காலில் காயம்பட்ட அந்த மனுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாக வனத்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர்..