• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் கிராமப்புற கபடி வீரர்களின் விளையாட்டு திறமை -இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார் சிங் பேட்டி

ByP.Thangapandi

May 6, 2024

தமிழ்நாட்டில் கிராமப்புற கபடி வீரர்களின் விளையாட்டு திறமை அர்ப்புதமாக உள்ளது உடல், எடை மட்டுமல்லாது விளையாட்டின் விதிமுறைகளிலும் எந்த தவறும் செய்யாமல் சிறப்பாக விளையாடுகின்றனர், ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை – என இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார் சிங் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் புரோ கபடி சீசன் 11 போட்டிக்கான குஜராத் ஜெயிண்ட் கபடி அணியின் இளம் கபடி வீரர்களை இந்திய கபடி அணி மற்றும் குஜராத் ஜெயிண்ட் கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார் சிங், குஜராத் ஜெயிண்ட் அணியின் உதவி பயிற்சியாளர் வைரவ சுந்தரம், தெலுங்கு டைடன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் அலெக்ஸ்பாண்டி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தனர்.

தென்னிந்த அளவில் சுமார் 400க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்குள்ளாகவே போட்டி நடத்தப்பட்டு சிறப்பாக விளையாடிய சுமார் 10 கபடி வீரர்களை இந்த குழுவினர் தேர்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பயிற்சியாளர் ராம்ஹார் சிங்.,

குஜராத் ஜெயிண்ட் கபடி அணிக்கு இளம் கபடி வீரர்கள் தேர்வு நடைபெற்றது. தென்னிந்தியாவின் குறிப்பாக கன்னியாகுமரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னை மைய பகுதி இல்லை, இந்த உசிலம்பட்டியாக உள்ளது, இது கிராமப்புற பகுதி, கிராமப்புற பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை உணர்ந்து அந்த பகுதியை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் 3 முதல் 4 அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர்கள் உள்ளனர்., ராஜரத்தினம், கணேசன் இவர்கள் எல்லாம் மிக பிரபலமான வீரர்கள், கணேசன், பிரபாகரன், முருகானந்தம், கங்காதரன் உள்ளிட்டோர் தொடர்ந்து நேசனல் விருதுகளை தமிழ்நாட்டிற்காக வாங்கி கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எப்படி ஐபிஎல் தொடரை போல கேபிஎல் – புரோ கபடிக்கான பார்வையாளர்களும் விருப்பமானவர்களும் அதிகம்.

தமிழ்நாட்டில் கபடி வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை குஜராத் ஜெயிண்ட் அணிக்காக புரோ கபடி போட்டியில் பங்கேற்க வைக்க உள்ளோம்.

இந்த கபடி வீரர்கள் தேர்வில் சுமார் 10 கபடி வீரர்களை தேர்வு செய்துள்ளோம், அவர்களுக்கு அடுத்த மாதம் மூன்று வாரத்திற்கு பயிற்சி அளித்து இறுதி தேர்வில் தேர்வு செய்பவர்களை புரோ கபடி போட்டியில் பங்கேற்க வைக்க உள்ளோம்.

கிராமப்புற கபடி வீரர்களுன் விளையாட்டு திறமை அர்ப்புதமாக உள்ளது., உடல், எடை ரீதியாகவும், அவர்களின் செயல்பாடுகளும் எந்த ஒரு தவறுகளும் இல்லாமல் விளையாடுகின்றனர். சிறந்த வீரர்களாக உள்ளனர் என பேட்டியளித்தார்.