• Sun. Oct 6th, 2024

காவல் ஆளிநர்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி

சேலம் மாநகர காவல் துறையின் சார்பாக சேலம் காவல் ஆளிநர்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சியில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாநகர காவல்துறையின் வடக்கு சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம் அம்மாபேட்டை அஸ்தம்பட்டி காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கான சிறப்பு யோகாசன பயிற்சி சேலம் புது ரோடு பகுதியில் உள்ள சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் யோகாசன ஆசிரியர் ஆனந்த முருகன் கலந்துகொண்டு மூச்சுப்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பதற்கான சிரிப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசன பயிற்சிகளை காவலர்களுக்கு கற்றுக்கொடுத்தார். சேலம் மாநகர வடக்கு சரக காவல் துணை ஆணையாளர் மாடசாமி அவர்கள் தலைமையில் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த யோகாசன நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகாசனத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வடக்கு சரக துணை ஆணையர்கள் நாகராஜ் சரவணகுமர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *