விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வனமூர்த்தி லிங்காபுரம்க கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ,சிறப்பு பூஜை ,நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுப்பிரமணியபுரம் காளியம்மன் கோவில், வெற்றிலை யூரணி காளியம்மன் கோவில் ,மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், குகன் பாறை வடகாசி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது..













; ?>)
; ?>)
; ?>)