மதுரை மாவட்டம் சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே ஜெயராமன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் துணைச் செயலாளர் கொத்தாலம் செந்தில்வேல் செல்வராணிமாவட்ட பிரதிநிதி பெரியசாமி அவைத் தலைவர் தீர்த்தம் மாணவரணி எஸ். ஆர். சரவணன், முட்டைக்கடை காளி, இளைஞர் அணி இரும்பாடி நல்லதம்பி நிர்வாகிகள் எஸ். எம். பாண்டியன், சங்கங்கோட்டை சந்திரன், ரவி, கண்ணதாசன், மாரிமுத்து, சௌந்தரபாண்டி, தேங்கா கடை கௌதம் மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
