• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தருமபுரி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு… பிரத்யேக வாகன வசதி..!

Byவிஷா

Jul 6, 2023

தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பென்னாகரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வீடு செல்ல 2ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். செந்தில்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய நிதியில் இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
தமிழக கிராமப்புறங்களில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு பிரசவத்திற்காக செல்லும் பெண்கள் மற்றும் பிரசவித்த ஏழைத் தாய்மார்கள் பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள நிலையில் அவர்களின் சிரமம் அறிந்து இந்த நூதன வசதியை அறிமுகப்படுத்திய செந்தில்குமார், எம்.பி.க்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.