• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சிறப்புரை..,

ByK Kaliraj

Jan 26, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் கருணாசுக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். மேலும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிகளுக்கு நடிகர் கருணாஸ் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ் பாஜகவின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓபிஎஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு புதிய தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மோடியின் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்து பலமுறை அதை செய்து தருகிறேன் இதை செய்து தருகிறேன் எனக் கூறி எனக்கு அழைப்பு விடுத்தனர் என்றார்.

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி வைத்தது நோக்கம் பாஜக தமிழகத்தில் காலூன்ற கூடாது என்பதற்காகவே என்றார்.

மேலும் டிடிவி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார் இன்று ஒன்று பேசுகிறார் நாளை ஒன்று பேசுவார் என நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்தார்

மேலும் பேசிய நடிகர் கருணாஸ் எந்த ஒரு நடிகருக்கு வேண்டுமானாலும் நீங்கள் விசில் அடியுங்கள் எனக்கு அது பிரச்சனை இல்லை எனவும் அப்பேற்பட்ட நடிகனாக இருந்தாலும் நீங்கள் அளிக்கின்ற விசிலை விட அதை விட தமிழகத்தில் விசில் அடிக்கும் கூட்டம் என்னிடத்தில் உள்ளது என்றார்.

மேலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் வரும் உங்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என நடிகர் விஜயை மறைமுகமாக நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய நடிகர் கருணாஸ் எனக்கும் நடிகர் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் பெரிய நடிகர் எனவும் நான் சின்ன நடிகர் எனவும் அவர் நினைக்கிறார் என்றார்.

மேலும் அவர் கோடியில் சம்பளம் வாங்குகிறார் எனவும் நான் லட்சத்தில் சம்பளம் வாங்குவதாக அவர் நினைத்து என்னை சின்ன நடிகராக நடித்துக் கொள்கிறார் எனவும் நடிகனான போட்டிக்கு நான் தயார் அதற்கு விஜய் தயாரா என கேள்வி எழுப்பினார்.

மேலும் மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர் களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை என கருணாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் அவரை ஜாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறீர்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய கருணாஸ் நடிகர் எல்லோருக்கும் பிடிக்கும் எனவும் காதல் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராக தான் வருவேன் என சொல்வது விஜயின் பேராசையை காட்டுகிறது எனவும் மக்களோடு பிரச்சனைக்கு இன்றைக்கு நீங்கள் நின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய நடிகர் கருணாஸ் படர்தாமரை உடம்புக்கு நாசம் ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம் பாஜகவின் தாமரை நாட்டுக்கு நாசம் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய நடிகர் கருணாஸ் இந்து என்ற ஒரு மதமே கிடையாது எனவும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய நிர்வாக வசதிக்காக இஸ்லாத்தை பின்பற்றியவர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவ மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்களாகவும் பல மதங்களாக இருக்கக்கூடியவர் களின் ஒரு தொகுப்பு தான் இந்து என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்தனர் என நடிகர் கருணாஸ் பேசினார்

மேலும் பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டாமல் அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்க வில்லை, அதையெல்லாம் அவர் நினைவுபடுத்தி பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒபிஎஸ் எனவும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓபிஎஸ்-யிடம் இருந்த பலரும் இபிஎஸ்-யிடம் சென்று விட்டார்கள் என்றார்

மேலும் ஒபிஎஸ்-ன் நிலமை இன்றைக்கு மிகவும் கவலைக் குரியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது எனவும்
முழுக்க முழுக்க பாஜக ஓபிஎஸ்-ஐ நம்ப வைத்து கழுத்து அறுத்திருத் திருக்கிறது என்றார்

முக்குலத்தோர் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்தி, டிடிவி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணியாக்கப் படுகிறது என்றால் முழுக்க முழுக்க பாஜகவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது என்றார்.

10 நாட்களுக்கு முன் இபிஎஸ் பற்றியும் மற்றும் பாஜகவை பற்றியும் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள்,

உலகத்தில் யார் ஒருவர் மக்களை முட்டாள் என நினைக்கிறார்களோ அவர்கள் தான் இந்த உலகத்தின் அடி முட்டாள் என்றார்.

மேலும் இபிஎஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன் என கூறி வந்த டிடிவி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று
சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக் காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என்றால்

மேலும் விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும் ஆனால் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும், ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் தேர்தல் களத்தில் தான் தெரியும் என்றார்.

மேலும் விசில் சப்தம் என்பது ஒருவர் இருவர் ஊதினால் கேட்க பரவாயில்லாமல் இருக்கும், கூச்சல் போட்டால் மக்கள் வெறுப்படைந்து விடுவார்கள் என்றார்.

மேலும் பாஜகவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி துண்டாக்குவது தான் எனவும் அதே முயற்சியை தான் தமிழகத்திலும் எடுக்கிறார்கள், ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை இந்த மண்ணில் காலூன்ற முடியாது, வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்றாது என்றார்.