• Thu. Apr 24th, 2025

விளையாட்டு வீராங்கனைகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்

Byஜெ.துரை

Mar 21, 2025

வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கினார்.

தமிழகத்தின் துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதி மற்றும் டெமேனோஸ் மென்பொருள் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியுடன் தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து சங்கத்தைச் சேர்ந்த 17 வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்களை வழங்கினார்.

ரூபாய் 18.82 லட்சம் மதிப்பிலான இந்த ஸ்கூட்டர்கள் சக்கர நாற்காலிகளாகவும், தேவைப்படும் போது பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டராகவும் மாற்றத்தக்க வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மூன்று சக்கரம் பேட்டரி ஸ்கூட்டர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, டெமேனோஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் கணேசன் ஸ்ரீராமன் மற்றும் டெமேனோஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு தலைவர் கிடியன் ஆகியோர் உடன் இருந்தனர்.