• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை , மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி, புதுத்தெருவில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
     இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில்  ஒன்றான  ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகில் உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு  வரும் ரமலான் பண்டிகை வளைகுடா நாடுகளை தொடர்ந்து இன்று தமிழகத்தில் ஒரு தரப்பினரால் அமைப்பினரால் கொண்டாடபடுகிறது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாட படுகிறது. அந்தவகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி, புதுத்தெருவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .