• Fri. Apr 26th, 2024

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக,பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்ட ம்

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் நிதி முழுவதும் திமுக கவுன்சிலர்கள் சிலர் மட்டும் பிரித்துக் கொண்டதை கண்டித்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் தமிழக அரசு  நகராட்சி அதிகாரிகள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியின் அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று மதியம் 12.45 மணி அளவில்  நடைபெற்றது. நகராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கருணாநிதி, ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் சாவித்திரி   வரவு செலவு உட்பட மன்ற விவாத பொருட்களை வாசிக்க தொடங்கியவுடன்.
அதிமுக நகர செயலாளரும் கவுன்சிலருமான  செல்வராஜ் பொது நிதி சுமார் 63 லட்சம் கலைஞர் மேம்பாட்டு நிதி சுமார் 33 லட்சம் ஆக சுமார் ஒரு கோடிக்கு மேல் நிதியை 21 வார்டுகளிலும் பணிகளுக்கு ஒதுக்காமல். திமுக கவுன்சிலர்கள் ஆறு பேர் வார்டுகளில் மட்டுமே பணிகள் ஒரு கோடிக்கு மேல் பணம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் நகரில் உள்ள ஏழு ஏரிகள் தூர்வாரி நடைபாதை உட்பட பணிகள் செய்ய வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் சுமார்  8 கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் நகரில் பன்றியில் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பிடித்த பன்றிகள் அனைத்தையும் விதிமுறைப்படி இலவசமாக வழங்கி பில் பெற வேண்டும் ஆனால் பிடிக்கப்பட்ட பன்றிகள் வெளி மாவட்டப் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில்  பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளது.

இதை கண்டித்து நிதியை பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் பிரிக்கும் வரை உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்ததை தொடர்ந்து,  கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில்,  கவுன்சிலர்கள் சேகர், சுப்பிரமணியன், தங்கபாண்டியன் நான்கு அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாமக கவுன்சிலர் ஜோதிலட்சுமி வேண்டுமென்றே பெண்கள் வார்டுகள்  புறக்கணித்துவிட்டு, திமுகவினர் தங்கள் வார்டுகளிலேயே நிதியை பிரித்துக் கொண்டது ஏற்க முடியாது அனைத்து வார்டுகளிலும் மக்கள் தேவைக்கு பிரிக்க வேண்டும் அதுவரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்ததை தொடர்ந்து   கவுன்சிலர் பூபதி தலைமையில்.  கவுன்சிலர்கள் மனோன்மணி ஜோதிலட்சுமி என்று நான்கு பாமக கவுன்சிலர்களின் மூன்று பெண் கவுன்சிலர்கள் மட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மன்ற வரவு செலவு விவாத பொருட்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நிறுத்தப்பட்டு கூட்டம் நிறைந்ததாக துணைத் தலைவர் கருணாநிதி தெரிவித்ததை தொடர்ந்து தலைவர் துணைத் தலைவர் ஆணையர் உட்பட அதிகாரிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஒரு பாமக கவுன்சிலர் ஒட்டுமொத்தமாக கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் ஏழு பேரும் நகராட்சி தலைவர் துணைத் தலைவர் ஆணையர் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு  தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *