பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூரில் பாஜகவினர் முருகன்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் கரூர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதனை தொடர்ந்து அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.