• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி அருகே பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை. புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு…

ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது .இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் .கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்த தடை விதித்திருந்தது.

.இதனால் சனிக்கிழமைகளில் கோவிலில் திறந்து வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை யடுத்து தமிழக அரசு தற்போது ஆயுத பூஜை திருவிழாவை முன்னிட்டு கொரோனா நடவடிக்கைகளில் தளர்வுகள் அறிவித்து கோவில்கள் திறக்கலாம் என்று உத்தரவிட்டது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவிலில், மூலவருக்கு துளசி மாலை சாத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை அடுத்து நவக்கிரக வழிபாடு, துர்க்கை வழிபாடு உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டுச் சென்றனர்.

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமுக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.