மதுரை, எஸ் எஸ் காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலில், அவரது 32 ஆவது சித்தி தினத்தை ஒட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது.

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைந்த நாளான நேற்று, (வியாழக்கிழமை) மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் எக்ஸெல் காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவர் கோவிலில் சிறப்பு பூஜை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்களால் நடத்தப்பட்டது.
மகா பெரியவர் விக்ரகம் வெள்ளி பாதுகைக்கு புஷ்பாஞ்சலி மற்றும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆன்மீக நண்பர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அனைவருக்கும் மகா பெரியவர் விபூதி பிரசாதம் மற்றும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.




