ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஆடி வெள்ளி மற்றும் ஆடி மாதத்தின் முதல் வளர்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு மீனாட்சியம்மனுக்கு கூல் காய்ச்சி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஐராவதீசுவரருக்கும், நந்தி பகவானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த சிறப்பு பூஜையில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
