• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு சிறப்பு அழைப்பிதழ்

ByK Kaliraj

Mar 24, 2025

விருதுநகர் மாவட்டம் ராமநாதபுரம் சிவன்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு அழைப்பிதழ் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கினர்.

உலகின் மிகப் பழமையான சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதற்கான சிறப்பு அழைப்பிதழை கும்பாபிஷேக விழா கமிட்டியினர் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களிடம் நேரில் வழங்கினார்கள்.

மகா கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழா கமிட்டியினர் கேட்டுக் கொண்டனர். கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்யுங்கள் அவசியம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வருகை தருகிறேன் என உறுதி கூறினார்.