மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலாதேவி ஊராட்சி செயலாளர் கண்ணன் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.