கள்ளத்தனமாக பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயாரிப்பதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் ஆகியோர் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள தகர செட்டுகளை அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது தேவர் நகரை சேர்ந்த பிரவின் குமார் (வயது 50) இவருக்கு சொந்தமான இடத்தில் இதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 30) குத்தகைக்கு எடுத்து தகர செட்டை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. சந்தேகத்தின் பெயரில் வருவாய்த் துறையினர் சோதனையிட்டார்கள். அப்போது சோதனையில் அறை முழுவதும் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள பேன்சி ரக வெடிகள் அதிக அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் வருவாய் துறையினர் குடவனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து தலைமறைவான பட்டாசு உரிமையாளர் ராம்குமாரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






