• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உதவித்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாம்..,

ByS. SRIDHAR

May 6, 2025

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு சமூக நலத்துறை சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு முதலமைச்சர் அரசினுடைய அனைத்து துறைகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து அங்கு இருக்கக்கூடிய பொது மக்களுடைய குறைகளை கோரிக்கைகளை கேட்டு அதன் மூலமாக அவர்கள் உடனுக்குடன் நிவாரணம் பெறுகின்ற அந்த சிறப்பான பணியை மேற்கொண்டுள்ளார்.

இன்றைக்கு திருமயம் தாலுகாவில் 60 ஊராட்சிகள் இருக்கின்றன மக்கள் எவ்வளவு பேர் இங்கே மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகிறார்கள். முதியோர் உதவித்தொகை பெறுகின்றார்கள். எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளி நண்பர்கள் எங்களுக்கு இன்னும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என்கின்ற கோரிக்கையை மனுக்களைக எங்களிடத்தில் தருகிறார்கள்.

ஆனால் அது குறிப்பிட்ட வடிவத்திலே நம்முடைய வருவாய்த்துறைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தான் அது பெற வேண்டும். அதை நம்முடைய விஏஓக்கள் மூலம் சரிபார்த்து அதற்குப் பிறகு ஆர் ஐ சரி பார்த்து அதற்குப் பிறகு வட்டாட்சியருடைய ஒப்புதலோடு அது மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பப்பட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட அந்த உதவி தொகைகள் வழங்கப்படுகின்றன.

எனவே இந்த நடைமுறைகள் ஒரு காலத்தில் மனு கொடுத்தா போதும். ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இன்றைக்கு மாறி இருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு நாமும் மாறிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தாலே தான் மக்களிடத்திலே விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது. அரசினுடைய தலையாயக் கடமை நாங்கள் போகின்ற பொழுது பலர் எங்களுக்கு உதவி தொகை கிடைக்கவில்லை என்று சொல்லுகிற பொழுது மிகுந்த கஷ்டமாக இருக்கிறது.

அவர்களுக்கு உரிய தொகை அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்பது தான் எனவேதான் ஒவ்வொரு ஊராகச் சென்று முகாம் நடத்துவதை விட நம்முடைய தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இங்கே முகாமை நடத்தி அதன் மூலமாக இதுவரை யார் யாரெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறவில்லையோ யார் யாரெல்லாம் முதியோர் உதவித்தொகை பெறவில்லையோ அவளிடத்திலே விண்ணப்பங்களை பெற்று அவர்கள் தகுதியுடையவராக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக அந்த உதவித்தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்பதுதான் இந்த முகாமுடைய முக்கியமான நோக்கமாக இருக்கிறது.

எனவே திருமயம் தாலுகாவை பொருத்தவரை நம்முடைய வட்டாட்சியர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகள் இருக்கக்கூடிய பயனாளிகள் இதன் மூலமாக பயன்பட வேண்டும். எங்களுடைய நோக்கம் எனவே இங்கு வந்திருக்கின்ற நீங்கள் இந்த திட்டத்தின் மூலமாக அதை உணர்ந்து இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உடைய அரசு உங்களுக்கான அரசு இங்கு இருக்கக்கூடிய ஏழை எளியவர்கள் சமுதாயத்திலே ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள்.

உங்களுடைய குரலாக ஒலிக்கின்ற ஒரு முதலமைச்சர் தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் சமூகம் சமத்துவம் சகோதரத்துவம் இவற்றையெல்லாம் நிச்சயமாகக் கொண்டு நடைபோடுகிற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சியாகும் எனவே இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது இந்தியாவிலே இன்றைக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய திட்டங்களை எல்லாம் இன்றைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவினுடைய முதன்மை மாநிலம் தமிழ்நாடு முதன்மையான முதலமைச்சர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் என்கின்ற பெருமையைப் பெற்றுத் தருகின்ற அளவுக்கு இந்த நான்கு ஆண்டு காலத்திலே ஒரு சிறப்பான ஆட்சியை நாம் நடத்தி இருக்கின்றோம். அதனுடைய பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். பல்வேறு திட்டங்களை நாம் இன்றைக்கு தந்து இருக்கின்றோம். 2021 மே 7க்கு முன்னாலே மகளிர் சகோதரிகளுக்கு அரசு பேருந்துகளிலே கட்டணம் இல்லாத பேருந்து பயணம் கிடையாது எல்லோரும் எண்ணிப் பாருங்கள்.

இன்றைக்கு நீங்கள் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் செய்வதன் மூலமாக உங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயை சேமித்து தருகின்றோம். அது உங்கள் கையிலே இருந்து கொடுக்கக்கூடிய காசு உங்கள் வருவாயிலிருந்து கொடுக்கக்கூடிய காசு. ஆனால் அதை சேமித்து தருவதன் மூலமாக உங்களுக்கு ஆயிரம் ரூபாயை அந்த பேருந்து கட்டணமாக தருகிற அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் அரசு இருக்கிறது. உங்கள் கைக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் கிடைக்கிறது.

அதைப்போல இன்றைக்கு மகளிர் உரிமைத்தொகை அதன் மூலமாக உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது 2021 மே ஏழாம் தேதிக்கு முன்னாள் இதை எல்லாம் யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. இந்த திட்டங்கள் உங்களுக்கு நேரடியாக பயன் பெறுகிற திட்டங்கள் நடுவிலே இதற்கான வழிதரர்கள் யாரும் கிடையாது. இடைத்தரகர்கள் கிடையாது உங்களுடைய கணக்குக்கு அந்த பணம் வந்துவிடும் முழு பயனாளியும் நீங்கள் தான் இதனை வேற யாரும் பயனாளிகள் அல்ல.

அதேபோல உங்களுடைய மகளோ மகளோ, அரசு பள்ளிகளே படித்துவிட்டு கல்லூரி படிப்பை படிக்கின்ற பொழுது அவர்களுக்கு மாதம் ஆயிர ரூபாய் 1ஆம் தேதி ஆனால் நீங்கள் கொடுக்கிறீர்களோ இல்லையோ தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடைய இடத்திலிருந்து உங்களுடைய குழந்தைகளுக்கு மகனுக்கு மகளுக்கும் ஆயிரம் ரூபாயை தருகிற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கின்றார்கள்.

இந்த திட்டமும் எந்த மாநிலத்திலும் கிடையாது எல்லாமே தமிழ்நாட்டிலேயே மட்டும்தான் இன்றைக்கு இருக்கின்றன. எனவே தான் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றவர்கள். இங்கே இருக்கக்கூடிய இந்த சிறப்பான திட்டங்களை எல்லாம் பார்த்துவிட்டு இந்தியாவிலேயே நாம் வசிக்கத்தக்க ஒரு ஆட்சியிலே இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் மூலமாக கிடைக்கிறது என்ற பெருமையோடு சொல்ல முடிகிறது.

பணப்புழக்கம் இன்றைக்கு உங்கள் கையிலே வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு இந்த அரசு கொண்டு வந்திருக்கின்ற பல திட்டங்கள் தான் அடிப்படை காரணம் எனவே இந்தியாவிலே தமிழகத்திலே வாழுகின்ற நீங்கள் தான் கொடுத்து வைத்தவர்கள் மற்ற மாநிலங்களில் இருக்கின்றவர்களுக்கெல்லாம் இத்தகைய திட்டங்கள் கிடையாது. அதை ஒவ்வொருவரும் மனசாட்சியோடு எண்ணிப்பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். நமக்காக இந்த அரசு இவ்வளவு செய்திருக்கின்றது. நமக்காக முதலமைச்சர் இரவுகள் பாராமல் பாடுபட்டு நம்முடைய நலனுக்காக

பல்வேறு நல்ல திட்டங்களை தந்து இருக்கின்றார் அந்த நல்ல திட்டங்களை தந்து இருக்கின்ற முதலமைச்சரை நாம் என்றென்றைக்கும் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டு இருக்கின்றோம் என்கின்ற உணர்வு நாம் ஒருவர் ஒவ்வொருவருக்கும் ஒன்றாக வேண்டும். அந்த அளவுக்கு சிறப்பான மாநிலமாக உன்னதமான மாநிலமாக தமிழ்நாட்டில் மாற்றி இருக்கின்றோம். தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் எந்த துறையாக இருந்தாலும் ஒரு காலத்தில் பின்னோக்கி இருந்த தமிழ்நாடு இன்றைக்கு அனைத்திலும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த்திருக்கின்ற நடவடிக்கைகளை அதற்கு அடிப்படை காரணம்.

எனவே தான் நம்பர் ஒன் மாநிலம் நம்பர் ஒன் முதலமைச்சர் அந்த மாநிலத்திலே நாம் இருப்பது நமக்கு பெருமை என்கின்ற உணர்வோடு நீங்கள் இருக்க வேண்டும் இன்றைக்கு உங்களுக்கான இந்த முகாம் இது மாற்றுத்திறனாளிகள் பயனடைகின்ற புகார் முதியோர் உதவித்தொகை பெறுகின்ற புகார் இதிலே வந்திருக்கின்ற நீங்கள் அத்தனை பேருமே அதிலே பலன்களை வேண்டும் என்கின்ற வேண்டுகோளை விருப்பத்தை வாழ்த்தாக தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வர முடியாது. அந்த கஷ்டத்தை அவர்களுக்கு ‌ உருவாக்க விரும்பாமல் அனைத்து உள்ளாட்சிகளிலும் ‌ இட ஒதுக்கீட்டை தந்து நியமன பதவியை தருகிற சட்டத்தை இந்தியாவிலேயே ‌ முதல் முறையாக நிறைவேற்றி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக முதல்வர் திகழ்கிறார்.