நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்நிலையில், சுதந்திர தினத்தை போற்றும் வகையில் காரைக்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சார்பில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மருத்துவ சேவை அணி சார்பில் தொடர்ந்து பல்வேறு நாட்களில் ரத்ததான முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.