பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் பாண்டியன் இவருக்கு துணைவி 1. ஜெயா (45) மகன் செல்லப்பாண்டி (22), துணைவி 2 மேரி (48), மகன்கள் ஜேம்ஸ் பாண்டியன் (24), பிரவீன் குமார்(22), துணைவி3 விஜயலட்சுமி
(45), மகன் பினகோஸ்(27), ஜோஸ்வா(23), எஸ்லியா (19) மூன்று துணைவிகளுடன் ஆறு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி அன்று சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் அவர்களின் தந்தை செல்லமுத்து உடல் நல குறைவால் இறந்து விட்டார். இறந்த துக்க நிகழ்ச்சிக்கு துணைவி மூன்றாவது விஜயலட்சுமி மகன்கள், மேரி மகன்கள் இவர்கள் தொக்க காலத்துக்கு ஏன் வர வேண்டும் என்று பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன் விரோதமாக கொண்டு நேற்று இரவு விளாமுத்தூர் சாலையில் ஜேம்ஸ் பாண்டியன், பிரவீன் குமார், செல்லப்பாண்டி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து பினேகாஸ், ஜோஸ்வா ஆக இருவரையும் கடுமையாக தாக்கி தாக்கியுள்ளனர். அப்போது பினேகாஸ் என்பவரின் கை மணிக்கட்டை வெட்டிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து விட்டனர். காயம் பட்டவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி கே எம் சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் அரசு ஆசிரியர் கொலை சம்பவத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பணியிடை நீக்கத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
