தேனி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி – மீனாதேவி தம்பதியினரின் மகன் சுபாஷ் சங்கர் இவர் தனது தாயரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மீனாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அல்லிநகரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுபாஷ் சங்கரை தேனி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சுபாஷ் சங்கரை வருகிற 17ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது சிறைக்கு கொண்டு செல்லும் நிலையில் சுபாஷ் சங்கர் நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால் காவல்துறையினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்த பின் எக்ஸ்ரே எடுப்பதற்காக அழைத்துச் சென்ற போது போலீசாரின் கைகளை உதறிவிட்டு சுபாஷ் சங்கர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கைதி சுபாஷ் சங்கரை பல்வேறு இடங்களில் தேடினர்.
அவர் வேடசந்தூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த சுபாஷ் சங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
மருத்துவ சிகிச்சைக்கு வந்த போது சிறை கைதி தப்பிச்சென்று மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சுபாஷ் சங்கரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற போது அவரிடம் இருந்து மருத்துவமனையில் தப்பிச்சென்ற சுபாஷ் கைது.
மூன்று காவலர்கள் தற்போது இடமாற்றம் நீதிபதி உத்தரவின் பேரில் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் மூன்று காவலர்களையும் இடமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.