• Thu. Jan 29th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது!!

ByR. Vijay

Oct 14, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெங்கிடங்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் 50 வயதான இவர் சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டு அவரது அப்பா வீட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மகள் லத்திகா சென்னையில் வேலை பார்த்து வரும் நிலையில் மகன் வெங்கடேஷோடு சேகர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சேகர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது திடிரென அவரது மகன் வெங்கடேஷ் சேகரின் தலையில் கட்டையால் தாக்கி உள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தொடர்ந்து தனது சித்தாப்பா அறிவழகனுக்கு போன் செய்து அப்பா இறந்து விட்டார் என கூறியதாக கூறப்படுகிறது. இதனத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது சேகர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்டு 108 வாகனத்தில் ஏற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாகூர் போலிசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரனையில் வெங்கடேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. நாகை அருகே தூங்கி கொண்டிருந்த தந்தையை மகன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.