சிலநேரங்களில் சில மனிதர்கள்., ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று அது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெளியானது அதே தலைப்பில் ஜனவரி 28ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஜெயகாந்தனின் கதைக்கும் இந்த சினிமாவிற்கும் தலைப்பைத்தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை.
சில நேரங்களில் சில மனிதர்கள் சினிமா ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெவ்வேறு வாழ்வியல் சூழல்களைக் கொண்ட மனிதர்களை ஒரு புள்ளியில் இணைக்க முயல்கிறது.
அசோக் செல்வனுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்பான வெள்ளந்தியானஅப்பா நாசர் மீது எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தும்அசோக் செல்வனுக்கு வாழ்க்கை மிகப்பெரிய இழப்பைத் தருகிறது. நடு இரவில் நடந்த ஒரு விபத்துடன் மணிகண்டன், அபிஹாசன், ரித்திவிகா தம்பதிகள் என பலரும் இணைக்கப்படுகிறார்கள். பிறகு அவரவர் மனதில் குறிப்பிட்ட அந்த விபத்து ஏற்படுத்தும் மாற்றங்களே திரைக்கதையா திரையில் விரிகிறது சில நேரங்களில் சில மனிதர்கள் நன்றாக உள்ளது.
முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒன்றோடொன்று ரசிகர்களே காட்சிகளை இணைத்து புரிந்து கொள்ள முற்பட வேண்டியிருக்கிறது.
தெளிவற்ற திரைக்கதையினால் ஒரு நல்ல கதை கொஞ்சம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் இரண்டாம் பாதி ரசிகர்களை இருக்கையின் முன் பகுதிக்கு பதட்டத்துடன் வரச் செய்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் மனித மனங்கள் சின்னச் சின்ன மன்னிப்புக்கோரலால் விடுதலை பெறும் காட்சிகள் இதம். உணர்வுப்பூர்வமான முழுமையான சினிமாவாக வந்திருக்கிறது சில நேரங்களில் சில மனிதர்கள்.
சகமனிதர்கள் மீது, முக்கியமாக நமது குடும்ப உறுப்பினர்களின் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வேண்டிய விதம் குறித்து பார்வையாளனுக்கு புரிய வைக்கிறது சில நேரங்களில் சில மனிதர்கள் படம்பல இடங்களில் படம் நாடகத்தன்மையுடன் இருப்பதை உணர முடிகிறது காட்சிகள் கோர்வையாக வருவதற்கு இயக்குநரை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. ஒளிப்பதிவாளரின் பங்கும் முக்கியமானது.என்றாலும் ஒரு இயல்பான சினிமாவாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.நடிப்பை பொறுத்தவரை மணிகண்டன் இந்த சினிமாவிலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திப் போயிருக்கிறார். அசோக் செல்வனின் நடிப்பில் நல்ல பக்குவம் தெரிகிறது. அசோக் செல்வனுக்கு ஜோடியாக வரும் பெண் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வைத் தருகிறார். ரசிகர்களின் மனதில் பளிச்சென நெருக்கமாகும் சாயல் அவருடையது. நடிப்பும் பாராட்டத்தக்கது.
ஒரு தத்துவார்த்த சினிமாவை எந்த அளவிற்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியுமோ அந்த அளவிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
பெயர்: சில நேரங்களில் சில மனிதர்கள்
தயாரிப்பு:எஆர் என்டர்டெயின்மென்ட்
இயக்கம்:விஷால் வெங்கட்
இசை :ரதன்
நடிப்பு:அசோக் செல்வன், அபிஹாசன், பிரவீண் ராஜா, மணிகண்டன்
வெளியான தேதி :28 ஜனவரி 2022
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]