• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் டைடல் பார்க் கட்டுமானப் பணிக்கான மண் பரிசோதனை துவக்கம்..!

Byவிஷா

Nov 30, 2023

மதுரையில் டைடல் பார்க் கட்டுமானப் பணிக்கான மண் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் டைட்டல் பூங்கா உருவாக்கி இருப்பதை போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து டைட்டல் பூங்கா மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 600 கோடியில் முதல் கட்டமாக 5 ஏக்கரில் இரண்டு கட்டிடங்கள் கட்டப்படும் எனவும், இரண்டாம் கட்டத்தில் மேலும் 5ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மதுரையில் நடைபெற்ற “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற தெற்கு மண்டல மாநாட்டில் அறிவித்தார். இதன்மூலம் முதற்கட்டமாக 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மதுரையில் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது மதுரை மாட்டுத்தாவணி மைதா னத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது டைடல் பார்க் அமைக்க தேவையான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் டைடல் நிர்வாகத்திற்கு நிறுவனத்திற்கு விரைவாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முதல் கட்டமாக 5.5 ஏக்கர் டைட்டன் நிர்வாகத்திற்கு வழங்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த இடமானது முழுமையாக சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமான பணி நடைபெற உள்ள 5.5 ஏக்கர் நிலத்தில் 12 இடங்களில் மண் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும் இந்த பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.