மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.



குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி (GLOBAL HUMAN PEACE UNIVERSITY) சார்பாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் மகேந்திரன் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவானது பாண்டிச்சேரி சபாநாயகர் செல்வம் அவர்கள் தலையில், ஓய்வு பெற்ற நீதியரசர், ஒய்வு பெற்ற IAS அதிகாரிகள், மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதுகுறித்து பேசிய மகேந்திரன், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவ டாக்டர் பட்டமானது, எனது மக்கள் சேவையை மேலும் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியோடும் செய்ய ஊக்கமளிப்பதாக உள்ளது என்றும் சேவை ஒன்றே நோக்கம் என்ற தாரக மந்திரத்தோடு என்றும் என் மக்கள் பணி தொடரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.