• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Apr 1, 2023

பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் நிறைவு பெற்று திறக்கும் நிலையில் இருந்தது ஆனால் மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகு சாலை பணிகள் இன்னும் முடியாததால் திறப்பு விழா தாமதமாவதாக கூறப்படுகிறது ஆகையால் அந்தபணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக மேம்பாலத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் கூறுகையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் அதற்கு பின்பு வந்த ஆட்சியினரால் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர் அதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது ஆனால் மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகுசாலை அதாவது சர்வீஸ் ரோடு பணிகள் நிறைவடையாததால் மேம்பாலம் திறப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது ஆகையால் மாவட்ட நிர்வாகம் அணுகு சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுத்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்…