மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த காளமேகம் என்பவர் சமூக ஆர்வலராக உள்ளார் இவருக்கு (+919893335417) குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அவர் பேசியதானது,

ஹலோ வணக்கம் சென்னை ஹெட் குவாட்டர் சென்னை போலீஸில் இருந்து எஸ்ஐ அருண்குமார் இந்த நம்பர் நீங்கள் தான் யூஸ் பண்றீங்களா வேற யாராவது யூஸ் பண்றாங்களா மும்பை மகாராஷ்டிராவில் இருந்து ஏஜிஎஸ் ஆன்ட்டி டெரரிஸ்ட் ஸ்குவாட் அதிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது என சொல்லி இணைப்பை துண்டித்தார். இது போன்று பல நபர்களை ஏமாற்றி வருகிறது. இந்த கும்பல் இந்த நிலையில் இவருக்கு அலைபேசி எண் வந்தது சுதாரித்துக் கொண்டு அவர் போக்கிலேயே பேசிய உடன் சுமார் 47 வினாடிகளில் இணைப்பை திடீரென துண்டித்து விட்டார்.
எனினும் இவர் மதுரை மாநகர ஆணையாளர் லோகநாதன் அவர்களிடம் சம்பவம் குறித்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில் நீங்கள் ஏதும் பயப்பட வேண்டாம் இது போன்ற அதிகம் ஏமாற்றப்படுவார்கள் பணம் ஏதும் இழந்து விடாதீர்கள் என்று சொன்னார். உடனடியாக நீங்கள் அந்த ஆடியோ பதிவியும் வந்த அலைபேசி எண்ணையும் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள் நான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார். சமூக ஆர்வலர் கூறுகையில்
இது போன்ற அழைப்புகள் வந்தால் பதற்றப்படாமல் அவர்கள் போகின்ற போக்கிலே போய் சரி சரி என்று உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு முடிந்த அளவிற்கு சென்று புகார் அளிக்கவும் யாரும் ஏமாந்து பணத்தை இழக்க வேண்டாம் போலீசார் யாரும் இதுபோன்று யாரையும் மிரட்டி டிஜிட்டல் அரெஸ்ட் பண்ண முடியாது பண்ணவும் மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.






