விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காயல்குடி ஆற்று படுகையில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல நாயகி உடனுறை மாயூரநாத சாமி திருக்கோவில் இந்த திருக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோவில் . இந்த திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறும் வழக்கம் .

கடந்த1982 ஆண்டு இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதலால் தேரோட்டம் இதனால் ஐந்து ஆண்டுகள் நடைபெறாமல் தடை இதை அடுத்து இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற சமூக ஆர்வலர் ராமராஜ் மற்றும் ஊர் பெரியோர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் பெல் நிறுவனம் மூலம் தேர் பராமரிக்கப்பட்டு தேர் சக்கரங்கள் புதிதாக இணைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
தற்போது ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வருகிற 8.07.2025 தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தேரை சுத்தம் செய்து பராமரிப்பு செய்து தேரோட்டத்திற்கு தேரை தயார் செய்தனர்.