நாளுக்கு நாள் வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து துறை மின்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக அதிவேகமாக மாறிவரும் சூழலில் வருங்கால போக்குவரத்து க்கான புதிய பாதையை உருவாக்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சொசைட்டி ஃபார் ஸ்மார்ட் இ-மொபைலிட்டி இணைந்து நடத்தும் ஸ்மார்ட் மொபிலிட்டி சம்மிட் 2026 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழில் துறையில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், இரண்டு நாள் மாநாடாக நடைபெற்றது. இம்மாநாட்டின் வாயிலாக மாணவ மாணவியர்கள் மத்தியில் உரையாற்றிய குமரகுரு கல்வி நிறுவனங்களின் முதன்மை கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் குறிஞ்சி குமார் கூறியதாவது.
ஸ்மார்ட் மொபிலிட்டி என்பது வெறும் முன்னேற்றம் மட்டும் இல்லை எனவும், இது ஒரு மறு சீரமைப்பு என்று தெரிவித்தார், வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பதை விட அவற்றை பயன்படுத்துவதற்கான அணுகலையே மக்கள் இனி விரும்புவார்கள் எனவும், எதிர்கால வாகனங்கள் வெறும் இயந்திரங்கள் மட்டுமின்றி, அவை கணினி மற்றும் தகவல் தொலைதொடர்புகளுடன், ஒருங்கிணைந்த தளமாக மாறும் என்று தெரிவித்தார். சாலையில் ஏற்பட்ட கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும், மிக முக்கியம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து. குமரகுரு மின்சார அறிவியல் பள்ளியின் இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு மாநாட்டின் விரிவான திட்டங்களை விளக்கினார். இம்மாநாட்டில், 20 தொழில் துறை வல்லுநர்கள் கூடி குழு விவாதங்கள் நடைபெற்றது. இதில், 180 ஆய்வு கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 சிறந்த கட்டுரைகளின் சமர்ப்பிப்பு இதில் அடங்கியது. இந்தியா இ பைக் சேலஞ்ச் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 96க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தாங்களாகவே வடிவமைத்த மின்சார பைக்குகளை ஒட்டி அதற்க்கு செயல் விளக்கமும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




