ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டு பகுதிகளில் உணவுவிடுதி, டீக்கடை, காய்கறி கடை,பழக்கடை ,உள்ளிட்ட ஏராளமான பெரிய மற்றும் சிறு கடைகள் உள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசு பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நகரில் ஓரளவுக்கு பாலித்தீன் பைகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.ஆனாலும் பாலித்தீன் பைகள் பாலிதீன் கப்புகள் ஆகியவற்றின் பயன்பாடு ஊடூருவி வெகுவாக அதிகரித்து வருகிறது.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சிலர் போட்டி போட்டு கொண்டு பாலித்தீன் பை மற்றும் டம்ளர்களை தினந்தோறும் தங்குதடையின்றி சப்ளை செய்து வருகின்றனர்.

அதே போல் நகரில் சிலர் பாலிதீன் பைகளை மற்றும் டம்ளர்களை டன் கணக்கில் இருப்பு வைத்துக்கொண்டு கடைகளுக்கு தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார பிரிவில் பணி புரியும் அலுவலர்கள் திடீரென ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய சிறிய கடைகளுக்கு சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை கண்ட இந்திய ராணுவம் போல் அடாவடியாக எந்த அனுமதியின்றி நுழைந்து கடைக்காரர்களை மிரட்டியும் அவர்கள் வைத்திருக்கும் சிறிதளவு பாலித்தீன் பைகளை கைப்பற்றியும் நீங்கள் கடை நடத்த முடியாது அனுமதி ரத்து செய்து விடுவோம் என மிரட்டியும் அபராதம் விதித்தும் மறைமுகமாக பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு தாங்கள் பாலித்தினுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம் என்று சுயதம்பட்டம் அடித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையிலேயே இரவு நேரங்களில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வேன்கள் மூலம் வந்து இறங்கி குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாலித்தீன் பைகள் கப்புகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை அவைகள்பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடம் கூட நகராட்சி சுகாதாரப் பிரிவுக்குதெரியும் என கூறப்படுகிறது. அதே போல் மோட்டார் சைக்கிள்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலித்தீன் பைகள் பேப்பர் கப்புகள் ஆகியவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பகல் நேரங்களிலேயே வினியோகம் செய்வதையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை உண்மை இவ்வாறு இருக்க சிறு மற்றும் குறு வியாபாரிகளிடம் பாலித்தீன் பைகள் வேட்டை நடத்துவதில் தீவிரம் காட்டும் நகராட்சி சுகாதாரத்துறையினர் மொத்தமாக பாலிதீன் பைகள் பதுக்கி வைத்து விநியோகம் செய்யும் மொத்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதன் மர்மம் என்ன என சமூக அலுவலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.