விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்துவிஷால் நடிக்கும் 33வது படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 அன்று வெளியானது . அப்படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிப்பதுஎனிமி படத்தின் தயாரிப்பாளர்வினோத். பன்மொழிப்படமாக இது உருவாகவிருக்கிறது என்று விஷால் சொல்லியிருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்திருந்த ‘பாட்ஷா’ திரைப்படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘ கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறீயே’ என்றும் ‘இந்தக் கதையை மாநாடு-2 என்றே சொல்லலாம் அந்த அளவுக்குத் திரைக்கதை உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]
- வெளியானது ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள்…ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேசிய […]
- தியான நிலையில் இபிஎஸ்… ஓபிஎஸ்-ஐ மிஞ்சிடுவார் போல..அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கோற்றுள்ளார். […]
- உலகப்போரில் வீசப்பட்ட குண்டு இத்தாலியில் மீட்பு…இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று 70 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1942ல் […]
- சீதாராமம் – விமர்சனம்தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் (மிருனாளின் தாக்கூர்) கொடுக்க […]
- ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் […]