சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் உதவி எண் ஸ்டிக்கரை ஒட்டி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேனி பங்களாமேட்டில் சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கலந்து கொண்டு சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது பணத்தை ஏமாறாமல் இருப்பது குறித்தும் தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்கள் உள்ளிட்டவை வழங்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். பின்னர் தேனி நகர் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களின் பின்புறம் சைபர் க்ரைம் பாதிப்பு குறித்து, பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் உதவி எண் ஸ்டிக்கரை ஆட்டோகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் 1930 என்ற உதவி என்னை அழைத்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.