விருதுநகர் மாவட்டம் சிவகாசி கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி. 50வயதான இவருக்கு 2 மகன்களும் பேரன் பேத்தி உள்ளனர். பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30ம் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்த உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 310 கிலோ பளுதூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் சிவகாசிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன், அவர்கள், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள பாண்டிமாதேவியை அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்






