விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி வசதி கேட்டதன் அடிப்படையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் .அசோகன், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் யாரும் தங்கிப் பயில விரும்பாத சூழலில், அந்த கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருந்தது.

இதனை அறிந்து, சிவகாசி அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுக்கு உயர் கல்வி பயில ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வரும், அவ் விடுதியை இன்று ஆய்வு செய்து தேவையான வசதிகளை மேம்படுத்தி தர துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.