• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…

ByKalamegam Viswanathan

Oct 4, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சங்கீதா இன்பம் உள்ளார். இவரது கணவர் இன்பம், அச்சகம் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை, ரயில்வே பீடர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார். பின்னர் தனது அலுவலக பணியாளர் ஒருவரை அனுப்பி, வண்டிக்கு பெட்ரோல் நிரப்பி எடுத்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த ஊழியர் இருசக்கர வாகனம் நின்ற இடத்திற்கு சென்று, வாகனத்தில் சாவியை பொருத்தி இயக்கிய போது திடீரென்று குபுகுபுவென்று புகை வந்து குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று இருசக்கர வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. சிவகாசி மாநகராட்சி மேயரின், கணவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.