• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குத்துச்சண்டை போட்டியில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிவகங்கை மாவட்ட வீரர்கள் சாதனை…

ByG.Suresh

Sep 3, 2024

குத்துச்சண்டை போட்டியில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிவகங்கை மாவட்ட வீரர்கள் சாதனை. சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம் துரைஆனந்த் வாழ்த்து தெரிவித்தார்.

சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற சேலம் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ,
சேலம் மாவட்ட, குரங்குசாவடியில், தனியார் பள்ளியில் சங்க பொது செயலாளர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. 100க்கணக்கான வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியை பமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவகங்கை சார்பாக ஃபயர் ஸ்டார்ம் பைட் கிளப் வீரர் மற்றும் வீராங்கனையினர் 29 பேர் பயிற்சியாளர் ச.குணசீலன் தலைமையில் களம் இறங்கினர், போட்டியின் முடிவில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சிறப்பாக விளையாடி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையையும் வென்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர், கோப்பையுடன் சிவகங்கை திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பெற்றோர்கள் வரவேற்றனர்,

மேலும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம் துரைஆனந்த் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி வீரர்களுக்கும் பயிற்சியாளர்கள் குணசீலன், தீணாதயாளன் மற்றும் சித்ரா தலைவர் துரைஆனந்த் பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்.