சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் முன்பு சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு, போதை கலாச்சாரம், ஊழல் போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சக்தி தலைமையிலும் நாகராஜன், மார்த்தாண்டன், சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வு, போதை கலாச்சாரம் ஊழல் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ,சிவகங்கை நகர் தலைவர் உதயா, பாலா,சதீஷ் ,சட்டமன்ற பொறுப்பாளர் சரவணன், ஒன்றிய பொறுப்பாளர்கள் பால்பாண்டி ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.









