முதல்வர் இன்று கடலூர் வருகை தரும் நிலையில் திட்டக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு, அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல முறை அதிகாரிகளிடம் கேட்டும் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி இன்று 50 க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இன்று திட்டக்குடி நகராட்சியில் துப்புரவு பணியினை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாமல், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் ஸ்டாலின் இன்று கடலூருக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
