• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: அரசு விழாவா? தி.மு.க கட்சி விழாவா?


திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா… அரசு விழாவா? தி.மு.க கட்சி விழாவா?கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி.?

விழா அழைப்பிதழில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான bகன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த்,(காங்கிரஸ்) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்,(அதிமுக) நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி(பாஜக) பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் (திமுக) குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் (காங்கிரஸ்) விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் (காங்கிரஸ்) கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார்( காங்கிரஸ்) ஆகிய மக்கள் பிரதிநிகளின் பெயர்கள் இடம் பெறாமல் புறக்கணிப்பு மாவட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.

கன்னியாகுமரியில் நடைபெறும் அய்யன் திருவள்ளுவர்சிலை வெள்ளி விழா அரசு விழாவா? அல்லது தி மு க வின் தனிப்பட்ட விழாவா.?.  அரசு சின்னம் பொறிக்கப்பட்ட இவ்விழா தொடர்பானஅழைப்பிதழில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.  இது மாவட்ட மக்களை அவமதிக்கின்ற செயலாகும் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30-12-2024 முதல் 01-01-2025 வரை தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தனர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல், திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல், அய்யன் திருவள்ளுவர் தோரண வாயில் அடிக்கல் நாட்டுதல் போன்ற பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  விழா அழைப்பிதழில் பட்டிமன்றத்தில் உரையாற்றுபவர்களின் பெயர்கள் அரசு அதிகாரிகளின் பெயர்கள், கவிஞர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.  

இவ்வேளையில் மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகின்ற மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளது.  இது மாவட்ட மக்களை அவமதிக்கின்ற செயலாகும்.  
அரசு சார்பில் நடைபெறுகின்ற அனைத்து விழாக்களிலும் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறுவது நெறிமுறையாகும். இந்தநெறிமுறைகளுக்கு மாறாக முதலமைச்சர் பங்கேற்கின்ற அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறாமல் இருக்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகதான் இருக்கும் என கருதுகிறேன்.  கன்னியாகுமரி மாவட்டத்தைபொறுத்தமட்டில் ஒரு பாராளுமன்ற தொகுதியும், ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன.  இந்நிலையில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே தி.மு.க வசம் உள்ளது.  இதனை மனதில் கொண்டே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகளின் பெயர்களை வேண்டுமென்றே இடம் பெறாமல் செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
முதலமைச்சருக்கு இந்த நிலை தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை.  சாதராணமாக நீதிமன்ற விழாக்களில் மட்டுமே இது போன்ற நிலை இருந்து வருகிறது.  அரசு சார்பில் நடைபெறுகின்ற இவ்விழாவில் இது போன்ற நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை அரசு விவரிக்க வேண்டும்.  நெறிமுறைகளை மீறி மக்கள் பிரதிநிதிகள்பெயர்கள் இடம் பெறாமல் செய்து விழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.  எதிர்காலத்திலும் இதனை முன் மாதிரியாககொண்டு அரசு அழைப்பிதழ்களில்  மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம் பெறாமல் செய்வதற்கு வழி வகுக்கும்.  வரும் காலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சியில் இல்லாத பிற மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை அரசு அழைப்பிதழ்களில் இடம் பெறாமல் தவிர்க்க செய்கின்ற நிலை ஏற்பட்டு ஜனநாயகத்திற்கு விரோதமான நிலை ஏற்பட்டு விடும்.
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிற்கு மக்கள் திரண்டு வருவார்கள் என்பதில் ஐயமில்லை.  ஆனால்அதற்கு மாறாக மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றியஆணையர்கள், பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு பொதுமக்களை வாகனத்தில் அழைத்து வரவும், அவர்களுக்கு உணவு போன்றவற்றை வழங்கவும் நிர்ப்பந்தப் படுத்துகிறார்கள்.  அரசு அலுவலர்களை துன்பப் படுத்துகிறார்கள்.  இதுவெட்கக் கேடானது.  இந்நிலை ஊழலுக்கு வழி வகுக்கும்.  சாதரணமாக வருகின்ற கூட்டத்திற்கு மாறாக, கட்டாயப்படுத்தி இவ்விழாவிற்கு அழைத்து வருவது எந்தவகையிலும் பொருந்தாது.

இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியுமா?  தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா?  இதுபோன்ற இழிநிலைகளை மக்கள் வெறுக்கிறார்கள்.  விரும்பி வருகிறவர்கள் தானாக வருவார்கள்.  நிர்ப்பந்தப்படுத்த வேண்டாம்.  வள்ளுவருக்கு பெருமை சேர்க்கின்ற விழாவா?  தி.மு.க-வின் தலைவருக்கு பெருமை சேர்கின்ற விழாவா?  இதை எல்லாம் உணர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக, நெறிமுறைகளுக்கு மாறாக, மக்கள்பிரதிநிதிகளின் பெயர்களை அழைப்பிதழ்களில் இடம்பொறமல் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.  எதிர்காலத்தில் இது போன்ற நிலை வரக்கூடாது.  இந்நிலைதொடரக்கூடாது.  இதற்கு காரணமானவர்கள் மீது அரசுஉரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்விழாவில் பங்கேற்க வாகனங்களில் மக்களைஅழைத்து வருவதற்கும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் அரசு எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் அரசு அலுவலர்கள் குறிப்பாக ஊராட்சி ஒன்றியஆணையர்கள், பொறியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்யமாவட்ட நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவு இட்டுள்ளது.  இது ஜனநாயக படுகொலையாகும். இது ஊழலுக்கு வழிவகுக்கும்.


மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு இதற்குதேவையான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாகமேற்கொள்ள வேண்டும்.  அரசு அலுவலர்கள் விழாவிற்குமக்களை திரட்டி வர அறிவுறுத்தும் பணிச்சுமைகளைகைவிட வேண்டும் என  முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.தளவாய்சுந்தரம் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரத்தின் அறிக்கை பொது மக்களின் மத்தியில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருப்பதை. ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை காண முடிகிறது, கேட்கவும் முடிகிறது.

நல்ல நிர்வாகியாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மிக குறுகிய நாட்களில் மக்கள் மத்தியில் பார்க்கப்படும் நிலையில், குமரியில் நடக்கும் அரசு விழாவில், மக்கள் பிரதிநிதிகளின் பெயர் உள்ளடங்கிய அழைப்பிதழ் வெளியிடப்படுமா.?