• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் வெள்ளி ஆபரணங்கள்,முத்து நகை கண்காட்சி

BySeenu

Mar 20, 2025

மும்பையில் இருந்து ஷாலகா வோராவின் புகழ்பெற்ற நகை பிராண்ட் பியர்ல் ஓசன் வழங்கும் பிரத்தியேக வெள்ளி ஆபரணங்கள் மற்றும் முத்து கண்காட்சி மார்ச்.20, 21ம் தேதிகளில் கோவை தாஜ் விவாந்தா ஹோட்டலில் நடைபெறுகிறது.

அபர்ணா சுங்க்கின் வழங்கும் இக்கண்காட்சியில் அசாதாரண வடிவமைப்புகளுடன் கூடிய கண்கவர் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் காலத்தைக் கடந்து செல்லும் அழகான முத்து ஆபரணங்கள் இடம் பெற்றுள்ளன. தினசரி அணிகலன்கள் முதல் விழாக்கால சிகரங்கள் வரை, ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற சிறப்பு ஆபரணங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. பாரம்பரிய கலைமுறைகளும் சமகால வடிவமைப்புகளும் சங்கமிக்கும் ஷாலகா வோராவின் அற்புத ஆக்கங்கள் கண்காட்சியில் பிரத்யேகமாகத் திகழ்கின்றன.

நிகழ்ச்சியில் ஸ்வாதி ரோகித், ராகி ஷா, அமீஷா மேத்தா, சிரிலதா கோமதேஸ்வரன் மற்றும் சபிதா அகர்வால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இக்கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.