• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எஸ்தெடிக்ஸ் சார்பில் ‘சிற்பி ஸ்கேன்ஸ்’ துவக்கம்..,

BySeenu

Sep 8, 2025

கோவை பீளமேட்டில், அவிநாசி சாலையில் அமைந்துள்ள முன்னணி அழகுசாதன அறுவை சிகிச்சை மையமான சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிற்பி ஸ்கேன்ஸ் மற்றும் சிற்பி கிளினிக் ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளது.

பெண்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி, உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான சேவைகளை வழங்கும் நோக்கில், இந்த புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜெம் மருத்துவமனைகளின் தலைவரும், லேப்ராஸ்கோபி துறையில் உலகப் புகழ்பெற்ற முன்னோடியுமான டாக்டர் சி. பழனிவேலு, பாப் பிக்சல் நிறுவனத்தின் சங்கீதா பீட்டர் ஆகியோர் இணைந்து, சிற்பி எஸ்தெடிக்ஸ் நிறுவனர் டாக்டர் ஏ.ஆர். ஸ்ரீ கிரிஷ் மற்றும் இணை நிறுவனர் டாக்டர் பி. வீணா சங்கரி முன்னிலையில் இந்த மையத்தைத் திறந்து வைத்தனர்.

பிப்ரவரி 2023 இல் நிறுவப்பட்ட சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது தொடக்கத்திலிருந்தே உயர்தர அழகியல் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது. கோயம்புத்தூரில் அறுவை சிகிச்சையில்லா உடல் வடிவமைப்பு சாதனமான பாடிடைட் (Bodytite) அறிமுகப்படுத்திய முதல் மையமாகும். மேலும், ஜூன் 2025 இல் 24 மணி நேர வசதியுடன் மெடிசின் பாக்ஸ் பார்மசியை அறிமுகப்படுத்தி நோயாளி பராமரிப்பு சேவைகளை மேலும் விரிவுபடுத்தியது.

இதில்
புதிய சிற்பி ஸ்கேன்ஸ் & சிற்பி கிளினிக் மையம்,
*மார்பக அல்ட்ராசவுண்ட் மற்றும் பெண்களுக்கான இமேஜிங்
*உணவுமுறை & ஊட்டச்சத்து பராமரிப்பு
*அழகுசாதன மகளிர் மருத்துவம்
*எடை குறைப்பு & உடல் வடிவமைத்தல் திட்டங்கள்

*மார்பக புற்றுநோய் ஆதரவு சேவைகள்
*மனஅழுத்த மேலாண்மை
சிறுநீர் கட்டுப்பாடு சிகிச்சை
*உடல் பருமன் மேலாண்மை
ஆகிய சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் மற்றும் நிபுணர் மருத்துவர்களின் ஆலோசனையுடன் வழங்குகிறது.