• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கையெழுத்து இயக்கம்..,

ByPrabhu Sekar

Dec 13, 2025

சென்னை பிரஸ் கிளப்பில், கலிபோர்னியா தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், NGO அமைப்பான Declaration of Consciousness Movement (DOCM) சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலியுறுத்தி பத்திரியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் DOCM அமைப்பின் நிறுவனர் ஆதிபென் போஸ் நந்திஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,
DOCM என்ற தன்னார்வ அமைப்பு தனிமனித உள்மாற்றம், நெறிமுறையான தலைமைத்துவம் மற்றும் விழிப்புணர்வு சார்ந்த உலகளாவிய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது.

இச்செய்தியாளர் சந்திப்பின் முக்கிய நோக்கம் நமது நாட்டின் பிரதமர் நரேந்திரமோடிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என உலகளாவிய முன்னெடுப்புகள் எடுத்துள்ளோம். அமைதி மற்றும் ஒற்றுமை, மனிதநேயம், உள்ளிட்ட 9 அம்சங்கள் பிரதமர் நரேந்திரமோடியிடம் உள்ளன.

இந்தியாவின் உலகளாவிய தலைமையை அங்கீகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கோடி கணக்கான மக்களிடம் ஆன்லைன் மூலம் இந்த கையெழுத்துகள் பெறப்படும். இதனை நோபல் நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு அமைதிற்கான நோபல் பரிசினை வழங்க வலியுறுத்துவோம்.

இந்தியாவின் கலாச்சார விழிப்புணர்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக DOCM பிரதமருக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை பிரச்சாரத்தில் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக முழுவதும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்கின்றோம் என்றார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் Declaration of Consciousness Movement தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் ராமேஸ்வரன், சதீஷ் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.