மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய தேர்தல் ஆணையமும் பி ஜே பிமற்றும் அதன் துணை அமைப்புகளும் சேர்ந்து ” வாக்கு திருட்டை ” மேற்கொண்டு வரும் ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்,து பொதுமக்களிடம் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்பாண்டியன், சோழவந்தான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராமன், முன்னாள் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தலைவர் தனிச்சியம் கணேசன், தொகுதி ஊடகப்பிரிவுத்தலைவர் வையாபுரி, சமயநல்லூர் பவுன்ராஜ், தென்கரை ராமகிருஷ்ணன், முள்ளை காமராஜ், குருவித்துறை கணேசன், மகளிர் அணி பரிமளம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். காமராஜர் சிலையிலிருந்து ஆரம்பித்து வ.உ.சி.சிலை வரை நடைபெற்றது.
