தலைவர் என்ற போர்வையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தை 100 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில், சேலம் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தயாரிக்கப்படும் இலவச சீருடைகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பள்ளி சீருடைகளை தயாரித்து கொடுக்கும் தையல் உறுப்பினர்களுக்கு ஆண்டு தோறும் வழங்க வேண்டிய ஐந்து சதவீத கூலி உயர்வை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், உறுப்பினர்களுக்கு முறையாக கொடுக்க வேண்டிய துணிகள் கொடுக்கப்படுவதில்லை. போனஸ் போன்ற எந்த சலுகைகளும் கொடுக்கப்படுவதில்லை. எனவே தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தலைவர் என்ற போர்வையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேலம் மகளீர் தையல் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.