சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளம் ஊர் பொதுமக்கள் எம்எல்ஏ ரகுராமனை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்காக பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை தந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதி ரகுராமனை ஊர் பொதுமக்கள் நான்கு வருடங்களாக எங்கள் ஊருக்கு சட்டமன்ற தொகுதி நிதி எதுவும் வழங்கப்படவில்லை. ஊருக்கும் வரவில்லை தற்போது வந்துள்ளீர்கள். பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது நீங்கள் வெளியேறுங்கள் என ஊர் பொதுமக்கள் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் போலீசாரே பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக வரவழைத்து உடனடியாக புதிய பஞ்சாயத்து அலுவலகம் பூமி பூஜையை நடத்திவிட்டு சாத்தூர் எம் எல் ஏ ரகுராமன் சென்று விட்டார். சென்று விட்ட சில நேரத்தில் சாத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் விஜயகரிசல்குளம் முன்னாள் கவுன்சிலர் அடைக்கலம் உட்பட சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொய் புகார் அளித்த சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரகுராமனை கண்டித்து, விஜய கரிசல் குளம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
