மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி பெட்ரோல் பங்குகளில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லாததால் பெட்ரோல் போடுவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் இல்லாத நிலையில் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். பெட்ரோல் நிறுவனங்கள் உரிய முறையில் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க வேண்டும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் இருப்பு குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு முறையான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.