புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு இடம் மாறுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி வர்த்தக வணிகர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இன்று ஒரு நாள் முழுவதும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காலை 10 மணிக்கு அனைத்து அரசியல் கட்சியினர் பொதுமக்கள் வர்த்தக வணிக சங்கத்தினர் இணைந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.