காரைக்கால் துப்பாக்கி சுடும் கிளப் சார்பில் பத்தாவது மாநில அளவிலான துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. காரைக்கால் தேசிய மாணவர் படை கமாண்டர் ரஞ்சித் ரத்தே துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கி வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியில் புதுவை காரைக்கால் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பெண்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக இளம் பெண்கள் ஆண்களுக்கு இணையாக துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டு இலக்குகளை துல்லியமாக சுட்டு அசத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.